உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உணவகங்களில் அதிரடிச் சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான குழுவினர், அப் பிரதேசத்திலுள்ள 14 இரவு நேர உணவகங்களைச் சல்லடை போட்டுத் தேடினர். இதில் உணவு கையாளப்படும் விதம், சமையலறைத் தூய்மை மற்றும் சேமிப்பு முறைகள் குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை மிக மோசமான முறையில் மீறிச் செயற்பட்ட 02 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட பெருமளவிலான உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சோதனைக்கு மத்தியில், உணவக உரிமையாளர்களுக்குத் தரமான உணவை வழங்குவது மற்றும் சமையலறைகளைப் பராமரிப்பது குறித்துத் தெளிவான ஆலோசனைகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

61 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0