உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
69 பார்வைகள்

ஈரான் மீது மீண்டும் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானிய மத்தியஸ்தத்தின் வழியாக அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்த விமா்சனத்தை மேற்கொண்டுள்ளார்.


ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் ஒட்டுமொத்த உலகத்துடனும் விளையாடிக் கொண்டிருக்கிறதாகவும், அவர்கள் இனி சிரிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா முழுமையாக ஆய்வு செய்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில் அந்த முன்மொழிவை நேரடியாகக் குறிப்பிடாமல், “ஈரானின் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சாடியுள்ளார்.

ஈரான் தனது அமைதித் திட்டப் பதிலைப் பாகிஸ்தான் தூதர்கள் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியது. ஈரானின் இந்த பதிலைத் தொடர்ந்து, அவர்கள் அமெரிக்காவை ஏமாற்ற முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; உலகப் பொருளாதாரங்களை அவர்களால் பணயக்கைதியாக வைத்திருக்கவும் முடியாது” என ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0