உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றார்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார்.

அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இதன்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் எனும் நான் …. எனத் தொடங்கி முதலமைச்சராக, தமிழக ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் பொறுப்பேற்றார்.

விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் துறைச்சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

அதேநேரம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது பதவியேற்பு நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக, அதிமுக ஆட்சியினை முறியடித்து புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசாங்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0