உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், புகழ்பெற்ற ஒளிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough) தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரித்தானிய அரச குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மன்னர் மற்றும் ராணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்களது இந்தச் சிறப்புமிக்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்று மாலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் டேவிட் அட்டன்பரோவின் பழைய நிழற்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

இதேவேளை, அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாளைக் சிறப்பிக்கும் வகையில், நேற்று மாலை லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் (Royal Albert Hall) பிரம்மாண்ட இசை கச்சேரி மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

நூறு ஆண்டுகளைக் கடந்தும் இயற்கையின் மீதான தனது தீராத காதலால் உலகையே வியக்க வைத்து வரும் டேவிட் அட்டன்பரோவுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0