உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
114 பார்வைகள்

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், தனிப்பெரும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியாமல் போயுள்ளது.

ஸ்காட்லாந்து தேசியக் கட்சி ஆட்சியைத் தக்கவைத்த போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 65 இடங்களை விட 7 இடங்கள் குறைவாகப் பெற்று (58 இடங்கள்) சிறுபான்மை அரசாங்கமாகவோ அல்லது கூட்டணி ஆட்சியாகவோ அமைக்க வேண்டிய சூழலில் உள்ளது.

இதேவேளை, ஸ்காட்லாந்தில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்த தொழிலாளர் கட்சி (Labour), எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் 17 இடங்களுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டது. இக்கட்சியுடன் சமபலத்துடன் ரிஃபார்ம் (Reform UK) கட்சியும் 17 இடங்களை வென்று ஸ்காட்லாந்து அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து பசுமைக் கட்சி (Greens) 15 இடங்களை வென்று தனது வரலாற்றிலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதில் முதல் முறையாக நேரடித் தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேடிவ் கட்சி வெறும் 12 இடங்களை மட்டுமே பெற்று, நாடாளுமன்றத்தில் தனது ‘பெரிய எதிர்க்கட்சி’ என்ற அந்தஸ்தை இழந்து வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஸ்காட்லாந்து அரசியலில் ஒரு புதிய அதிகாரப் பகிர்விற்கும், பலமான கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்கும் வழிவகுத்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0