உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொ*லை முயற்சி வழக்குப்பதிவு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

வட அயர்லாந்தின் லர்கன் (Lurgan) பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய நபர் ஒருவர் மீது கொ*லை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு, முகமூடி அணிந்த இருவர் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தைக் கடத்தி அந்த ஓட்டுநரின் வாகனத்தில் வெடிகுண்டை ஏற்றி , அதனைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லுமாறும், தவறினால் அவர் கொல்லப்படுவார் என்றும் மிரட்டியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நபர், இன்று மே 8 ஆம் திகதி கிரெய்காவன் (Craigavon) நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் துப்பறியும் அதிகாரிகள், பொலிஸாரின் விசாரணைக்குத் தடையாக இருந்ததாகக் கூறி கடந்த புதன்கிழமை பெண் ஒருவர் மீது குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0