உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
71 பார்வைகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சடலங்களை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலங்கள் மாமாங்கம் மூன்றாம் குறுக்கினை சேர்ந்த 56 வயதுடைய சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் அரசடியை சேர்ந்த 36 வயதுடைய சொர்ணலிங்கம் குகேஸ் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இருந்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பணிப்புரைகளை விடுத்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0