உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மக்கள் வழங்கிய ஆணையை மதியுங்கள்!விஜயைப் பதவியேற்க அனுமதியுங்கள்!!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதமைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்று இரண்டாவது முறையாகவும் ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“மக்கள் த.வெ.கவைத் தனிப்பெரும் கட்சியாகத் தெரிவு செய்துள்ளனர். எனவே, குழப்பங்களுக்கு இடமளிக்காமல் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். இதுவே முறையானது” – என்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீர.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,

“பதவியேற்புக்கு முன்னரே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயற்பட வேண்டும். விஜய் தனது பெரும்பான்மையைச் சட்டசபையிலேயே நிரூபிப்பதற்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்க வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ‘எக்ஸ்’ தளத்தில்,

“ஆளுநரின் இந்தச் செயற்பாடு அரசமைப்புக்கு முரணானது. எமக்குள்ளே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை காரணமாக அரசியல் களம் சூடுபிடித்துள்ளதோடு, ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0