உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

பிரித்தானியாவின் எரிசக்தி ஜாம்பவானான ‘ஷெல்’ (Shell) நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபத்தில் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் எதிரொலியாக, பிரித்தானியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ‘ஷெல்’ தனது காலாண்டு லாபத்தில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.

நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்), வரிக்குப் பிந்தைய நிகர லாபம் 5.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஈட்டப்பட்ட லாபம் 4.78 பில்லியன் டொலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச எரிசக்தி சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளுக்கு மத்தியிலும், இந்த வலுவான முடிவுகளை எட்ட முடிந்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வேல் சவான் (Wael Sawan) தெரிவித்துள்ளார்.

எமது செயல்பாட்டுத் திறனில் காட்டிய தீவிரமான கவனம் காரணமாகவே இந்த உயர்வு சாத்தியமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஷெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0