உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் சுமைகள் மற்றும் பாதுகாப்பற்ற வேலைகள் ஆகியவை மக்கள் சுரண்டப்படுவதற்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நவீன தொழில்நுட்பமானது குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக மக்களைச் சேர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் எளிதாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர அடிமைத்தன ஒழிப்பு ஆணையர் எலியோன் லயன்ஸின் கூற்றுப்படி, 2025ம் ஆண்டில் 23,000க்கும் மேற்பட்ட சாத்தியமான பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 22 வீதம் அதிகரிப்பு மற்றும் இதுவரையிலான மிக உயர்ந்த அளவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் பிரித்தானிய குடிமக்கள் ஆவர். அதேவேளையில், எரித்திரியா மற்றும் வியட்நாம் ஆகியவை பாதிக்கப்பட்ட மற்றைய முக்கிய நாடுகளாகும்.

குற்றக் கும்பல்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஆட்கடத்தல், கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றைக் கண்காணிப்பது மேலும் கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தளங்கள், குற்றவாளிகள் குழந்தைகளையும் பாதிக்கப்படக்கூடிய நபர்களையும் குறிவைக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு மிரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சிறுவர்கள் போதைப்பொருள் வலையமைப்புகளிலும், சிறுமிகள் பாலியல் சுரண்டலுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0