உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பிரித்தானியாவில் இன்றைய தினம் நடைபெறுகின்ற உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்காக, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

குறிப்பாக, லண்டன் பெருநகர காவல் சேவை உட்பட பல பிராந்திய காவல்துறை பிரிவுகள், முக்கிய நகரங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இதன் கீழ், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சந்தேகத்திற்கிடமான நகர்வுகளை கண்காணிக்க சிசிடிவி மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகளும் பயன்படுத்த உள்ளதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், முக்கிய நகரங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்படும் சூழ்நிலைகளில் விரைவு நடவடிக்கை அணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கக்கூடிய சைபர் தாக்குதல்கள் அல்லது தவறான தகவல் பரவல்களைத் தடுக்கும் நோக்கில், டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறை இணைந்து இணைய வழி அச்சுறுத்தல்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், நகர மையங்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் முகாம்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக அமைதியை குலைக்கும் முயற்சிகள், போராட்டங்கள் அல்லது மோதல்களைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் பிரித்தானிய அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவிற்கு வலுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0