உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என சீனாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் உயர்மட்ட தூதரின் சீன பயணத்திற்கு முன்னதாக, குறித்த அறிப்பு வெளியாகியுள்ளது.

வெளிநாட்டுச் சட்டங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு எதிராக சீன நலன்களைப் பாதுகாக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டத்தை, அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் முதல் முறையாகப் பயன்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் நீண்ட அதிகார வரம்பை துல்லியமாக எதிர்கொள்வதற்காக, சட்டத்தின் ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் கூறியுள்ளன.


ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்து வரும், சீனாவில் உள்ள ‘eapot Independent’ சுத்திகரிப்பு ஆலைகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு எதிராக கருவூலத் துறை அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. அது அத்தகைய ஐந்து சுத்திகரிப்பு ஆலைகள் மீது தடைகளை விதித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் மாத இறுதியில் விதிக்கப்பட்ட சமீபத்திய தடையானது, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ள ஈரானின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒன்றான ஹெங்லி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை இலக்காகக் கொண்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0