உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறைவு.. அமெரிக்கா வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் முதற்கட்டத் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின் இலக்குகள் எட்டப்பட்டு விட்டதாக ரூபியோ உறுதிப்படுத்தினார்.

“ஒபரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) இப்போது நிறைவடைந்தது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், போரின் தாக்குதல் கட்டம் முடிந்துவிட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி இப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக ரூபியோ குறிப்பிட்டார்.


ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்து ஈரானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) எட்ட அமெரிக்கா முன்னுரிமை அளிக்கிறது. அமெரிக்கா அமைதி வழியை விரும்பினாலும், ஈரான் இதுவரை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் தனது உரையை நிறைவு செய்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0