உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
55 பார்வைகள்

திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது.

ஆளும் கட்சியான திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆளுநர் மாளிகையின் செயலாளர் மூலமாக் அந்த கடிதம் பெறப்பட்டு, ஆளுநரிடம் கொடுக்கப்பட உள்ளது. இந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் ஆளுநர், தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.

இதையடுத்து தவெக ஆட்சி அமைக்கும். குறிப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 10 இடங்கள் தேவை எனும் நிலை உள்ளது. இதற்காக, விரைவில் சட்டமன்றத்தை கூட்டி தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இதற்காக கம்யூனிஸ்டு கட்சிகள், மற்றும் பிற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0