உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
50 பார்வைகள்

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர்.


இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் செவ்வாய் மே 5 ஆம் திகதி செய்தி வெளியிட்டன.

பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழும் ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 4:40 மணியளவில் (0840 GMT) இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக சிசிடிவி மற்றும் சின்ஹுவா செய்திகள் தெரிவிக்கின்றன.

தீப்பரவலை அடுத்து, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையின்படி, சுமார் 500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சி நிறுவனத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விரைவான விசாரணைக்கும், இந்தச் சம்பவத்திற்கு கடுமையான பொறுப்புக்கூறலுக்கும் சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீன இணையதளங்களில் வெளியான காணொளிகளில், இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடந்த இடிபாடுகளுடன் கூடிய ஒரு பெரிய இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறும் காட்சிகளை காட்டின.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0