உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
51 பார்வைகள்

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்துள்ளது.
ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இன்று மே 5 ஆம் திகதி ஜப்பானில் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
14 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 1.329 கோடியாக (13.29 மில்லியன்) குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.50 லட்சம் குறைவாகும்.

மொத்த குழந்தைகளில் சிறுவர்கள் 68.1 லட்சம் பேரும், சிறுமியர் 64.8 லட்சம் பேரும் உள்ளனர். 12 – 14 வயதுடையவர்கள் 30.9 லட்சம் பேர். 0 – 2 வயதுடையவர்கள் வெறும் 21.3 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இது ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2025 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை வாய்ப்பு அறிக்கையின்படி, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில், தென்கொரியாவிற்கு (10.2%) அடுத்தபடியாக, ஜப்பான் (10.8%) மிகக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0