உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தல் முடிவை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது.

இந்த நிலையில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு த.வெ.க. தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநர் அவசரமாக இன்று சென்னை செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை திரும்பும் ஆளுநர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக பெரும்பான்மையைப் பெறுமா என்பதைத் தீர்மானிப்பதற்காகத் தீவிரமான திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், பதவியேற்பு மே 7ஆம் திகதிக்கு முன்பே நடைபெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிசெம்பரில் அமெரிக்காவுக்குப் பயணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர்…

85 0 0
இந்திய செய்திகள்

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜயின் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப்…

104 0 0
இந்திய செய்திகள்

இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் இலங்கை தொடர்பான முக்கிய முடிவு

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான வரைவு அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான…

95 0 0
இந்திய செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய்கான ஆதரவு குறைவு!

தமிழ் நாட்டில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களப் பிரசாரம் தீவிரமாகியுள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் குறித்த இரண்டு தொகுதிகளிலுமே…

81 0 0