உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை இல்லை: லெபனான் சபாநாயகர் திட்டவட்டம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாதவரை, அந்த நாட்டுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி தெரிவித்துள்ளார்.

லெபனானின் ‘அன்-நஹார்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “எந்தவொரு அரசியல் முன்னெடுப்பிற்கும் முன்பாகப் போரை நிறுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் தனது குண்டு வீச்சுகளை நிறுத்துவதற்கு உரிய உத்தரவாதம் தராமல் பேச்சுவார்த்தை நடத்துவதை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

நபி பெர்ரியின் ‘அமல்’ இயக்கம், இந்த விவகாரத்தில் ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளை இவர்கள் எதிர்ப்பது, அந்நாட்டின் அரசியல் சூழலில் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகால உள்நாட்டுப் போரைச் சந்தித்த லெபனானில், தற்போது நிலவும் இந்த அரசியல் முரண்பாடுகள் மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவதை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0