உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்படுகின்றன.

இதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் 3,300-க்கும் மேற்பட்ட மேஜைகள் இயங்கிவருகின்றது. இந்த தேர்தல் இறுதி முடிவுகள் பல அதிரடித்திருப்பங்களுடன் வெளியாகவுள்ள நிலையில் அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச மக்களிடமும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, சென்னையில் 16 இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், தேர்தல் முடிவுகள் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0