உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
50 பார்வைகள்

அட்லாண்டிக் பெருங்கடலில் 150 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் மூன்று பேர் திடீரென உயிரிழந்துள்ளனர்.

எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய அரிய வகை நோயான ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) பாதிப்பு இவர்களில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அர்ஜென்டினாவின் உசுவாயாவிலிருந்து (Ushuaia) கேப் வெர்டே (Cape Verde) நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற கப்பலில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, சுகாதாரப் பிரிவினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐந்து பயணிகளுக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

“பாதிக்கப்பட்ட ஆறு நபர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று WHO கூறியுள்ளது. மேலும், “கூடுதல் ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நோய்ப்பரவல் குறித்த விரிவான புலனாய்வு உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவக் கண்காணிப்பும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன. வைரஸின் மரபணு வரிசைமுறை (Sequencing) குறித்த ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிப்பு அறிகுறிகள் தென்படும் மற்ற இரண்டு பயணிகளை வெளியேற்றுவதற்காக (Evacuate) சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0