உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றுவோம்.!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

ஈரான் – அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஈரானில் இருந்து தாயகம் திரும்பும் அமெரிக்க கடற்படை ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றிவிடலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவையாகப் பேசியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வந்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும், அணுசக்தித் திட்டங்களை நிரந்தரமாக கைவிடக் கோரியும் ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

கியூபாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ட்ரம்ப்பின் நகைச்சுவையான பேச்சுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

வொஷிங்டனில் உள்ள பாம் கடற்கரை ஃபோரம் கிளப் நடத்திய ஒரு நிகழ்வில் ட்ரம்ப் பேசுகையில், “கியூபாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.

யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் கியூபாவில் இருந்து சுமார் 100 யார்டுகள் தொலைவில்தான் நின்றுவிடும். அவர்கள் நன்றி, தோல்வியை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிவிடுவார்கள்” என்றார்.

கியூபா அரசாங்கத்தில் தலைமையை மாற்றுவதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.

தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கியூபாவின் பாதுகாப்பு எந்திரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், எரிசக்தி, சுரங்கம், நிதிச் சேவை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை குறிவைத்து தடைகளை விரிவுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், விரைவில் கியூபா மீது அமெரிக்க தாக்குதல் நடத்த டிரம்ப் சூட்சகமாகத் தெரிவித்திருப்பது உலகளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0