உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்ய பெண்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்க்கும் இஸ்ரேல் – ஐநா நிபுணர்கள் குழு கவலை!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
71 பார்வைகள்

பாலஸ்தீனியர்களின் உயிரை விட அரசியல் லாபம், ராணுவ வியூகங்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


இஸ்ரேலின் பாலியல் மற்றும் பாலின வன்முறையானது பாலஸ்தீனிய சமூகத்தை பயமுறுத்தவும், அவர்களை அடிபணிய வைக்கவும் ஒரு கருவியாகச்செயல்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்க்கையில் பாலியல் வன்முறை ஒரு அங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இது மக்களை அச்சுறுத்தவும், அடிபணிய வைக்கவும், அவர்க0ளின் நிலத்திலிருந்து அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.

பாலஸ்தீனியர்களின் உயிரை விட அரசியல் லாபம், ராணுவ வியூகங்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள், வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளுடனான மோதல்கள் என அனைத்து இடங்களிலும் இத்தகைய வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன.

பாலியல் வன்முறையானது சமூகத்தில் ஒருவித அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தி, சமூக ஒற்றுமையைச் சிதைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பாலஸ்தீனியர்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தூண்டுகிறது, இது மறைமுகமாக இன அழிப்புக்கு வழிவகுக்கிறது.

காசாவில் உள்ள மகப்பேறு மற்றும் பாலியல் சுகாதார மையங்களை இஸ்ரேல் திட்டமிட்டு அழித்துள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இது பாலஸ்தீனியர்களின் எதிர்கால சந்ததி மற்றும் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் ஒரு நீண்ட காலத் திட்டமிட்ட நடவடிக்கை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய அலட்சியப்போக்கு சர்வதேச சட்டத்தின் வலிமையைக் குறைப்பதுடன், வன்முறைச் சுழற்சி மேலும் தொடரவே வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அனைத்து வகையான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐநா நிபுணர்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0