உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரான் மீது தாக்குதலுக்கான நாடாளுமன்ற அனுமதி பெறும் 60 நாள் காலக்கெடு தற்காலிக நிறுத்தம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஈரானுடனான போர்நிறுத்தம், போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது என அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தது. இது குறித்த அறிவிப்பை, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தெரிவித்தார். அமெரிக்காவின் போர் அதிகார சட்டப்படி, போர் நடவடிக்கைக்கு, 60 நாட்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், அதன்பின் போர் நடவடிக்கையை அதிபர் திரும்ப பெற வேண்டும். இந்த 60 ஆவது நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது.


இதனால் சட்டப்படி போரின் 60 ஆவது நாளான மே 1 ஆம் திகதி, ஈரானுடனான போருக்கு டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோருமா என்று ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் டிம் கெய்ன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத், ‘‘ஈரானுடனான போர்நிறுத்தம், போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது’’ என்றார்.

இந்த காலக்கெடு முடிவடைவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனிடம் கேட்டபோது, ​​”அமெரிக்கா போர் நிறுத்தத்தில் உள்ளது. ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படவில்லை. ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா முயன்று வருகிறது’’ என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0