உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஈரான் – அமெரிக்கா இடையே சண்டை நிறுத்​தம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்​கைகள் நிறைவேற​வில்லை என்​றால், ஈரான் மீதான தாக்​குதல்​களை நிறுத்​தப்​போவ​தில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்​தில் கூறி​யிருந்​தார்.


ஈரான்- அமெரிக்கா இடையே அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்து வரு​கிறது. முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்த நிலை​யில், 2-வது கட்ட பேச்​சு​வார்த்தை தாமத​மாகி வரு​கிறது. இந்​நிலை​யில், ஈரான் அதிபர் அலு​வலக தகவல் தொடர்பு அதி​காரி சையத் மெஹ்தி அளித்​துள்ள பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்கா கீழ்த்​தர​மான விளை​யாட்​டு​களில் ஈடு​படு​கிறது.

குழந்​தைகளை கொன்ற அதிபர் ட்ரம்ப் தோண்​டிய குழி​யில் சிக்​கிய அமெரிக்க அதி​காரி​கள் தப்​பிச் செல்ல வேண்​டும். ஈரான் மீது நடத்​திய தாக்​குதல்​களுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்​கி​விட்டு தங்​கள் நாட்​டுக்கு திரும்பி செல்ல வேண்​டும். ஈரான் அமை​தி​யை​யும், நட்​பை​யும் விரும்​பும் நாடு.

எங்​களிடம் யாராவது அச்​சுறுத்​தல் மொழி​யில் பேசி​னால், அவர்​களுக்கு பலத்த அடி கிடைக்​கும். இவ்​வாறு சையத் மெஹ்தி எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்​.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0