உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நேபாளத்தில் வாகன விபத்து; பலர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

நேபாளத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், 20 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நேபாளத்தின் ரோல்பா மாகாணம், ஜல்ஜாலா மலைப்பகுதியில் வியாழக்கிழமை (30) மாலை இடம்பெற்றுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில், சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள பௌத்த மடாலயத்தை நோக்கிச் சென்ற பக்தர்கள் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள புத்த பூர்ணிமா விழாவைக் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் இருந்து பலர் அந்த மடாலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அவ்வாறு மலைப்பாதையில் பயணித்த ஜீப், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையிலிருந்து விலகி சுமார் 700 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மீட்பு குழுக்கள் கடினமான நிலைமைகளுக்கு மத்தியில் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த விபத்து தொடர்பாக நேபாள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0