உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கோஹினூர் (Koh-i-Noor) வைரத்தை மீட்க மீண்டும் அழுத்தம்; கோரிக்கை வைக்கப்போவதாக நியூயோர்க் மேயர் அறிவிப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச் சந்திக்கும்போது, கோஹினூர் (Koh-i-Noor) வைரத்தை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தப் போவதாக நியூயோர்க் மேயர் ஸோரான் மம்தானி (Zohran Mamdani) தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, நியூயோர்க் சென்றுள்ள மன்னர் சார்ள்ஸ் 9/11 நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் Mamdani, ஆந்திராவில் கண்டெடுக்கப்பட்டு காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 105 காரட் கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பியளிக்கக் கோருவேன் என தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக இந்தியா இந்தக் கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், மன்னரின் இந்தப் பயணத்தில் இராஜதந்திர ரீதியாக இக்கோரிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், பக்கிங்ஹாம் அரண்மனை இது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0