உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஈரான் மீதான முற்றுகையை நீட்டிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

உலகளாவிய முக்கிய எண்ணெயான பிரென்ட் மசகு எண்ணெய் விலை, புதன்கிழமை அன்று ஒரு பீப்பாய் 120 டொலர் (89 பவுண்ட்) அளவைத் தாண்டியது. மேலும், அது சிறிது நேரத்திற்கு பின்னர் 122 டெலரை எட்டி, 2022 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதன் மிக உயர்ந்த விலையை அடைந்தது.

அதேநேரம், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் மேற்கு டெக்சாஸ் இன்டர் மீடியட் மசகு எண்ணெயின் விலையும் 2.3% உயர்ந்து, ஒரு பீப்பாய் சுமார் 109 டொலராக இருந்தது.

தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் நோக்கில், ஈரான் மீது குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தொடர் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தயாரித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டதாகத் தோன்றுவதாலும், முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டிருப்பதாலும், இந்த வாரம் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0