உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ட்ரம்ப் மனைவியை விமர்சித்த நடிகரை பதவி நீக்கக் கோரிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
58 பார்வைகள்

அண்மையில் வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதலைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மலுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் மெலனியா ட்ரம்பை கேலி செய்து , டொனால்ட் ட்ரம்பிற்கும் மெலனியாவுக்கும் இடையிலான வயது வித்தியாசத்தை கிண்டல் செய்யும் விதமாக இது சொல்லப்பட்டாலும், தற்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

மெலனியா ட்ரம்ப் இதனை “வெறுக்கத்தக்க மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்” என்று சாடியதுடன், கிம்மலை ஏபிசி நிறுவனம் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த கிம்மல், தனது கருத்து ஒரு நகைச்சுவை மட்டுமே தவிர, வன்முறைக்கான அழைப்பு அல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், வெறுப்புப் பேச்சுகளைக் குறைக்க விரும்பினால், மெலனியா தனது கணவரிடமிருந்தே அந்த மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்ட கிம்மல், தற்போது மீண்டும் பதவி நீக்கக் கோரிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0