உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்க ரஷ்யாவை ஒரு ‘லைஃப்லைன்’ (Lifeline) அல்லது உயிர்நாடியாகப் பயன்படுத்த முடியுமா ?

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தொடர் போர் மற்றும் முடக்க நிலை காரணமாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கடல்வழி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஈரான் தனது பார்வையை வடக்கு நோக்கி, அதாவது ரஷ்யாவை நோக்கித் திருப்பியுள்ளது.

ஈரானிய வெளியுறவு மமைச்சர் அப்பாஸ் அராக்சி சமீபத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேசினார். தடைகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதித்த அவர், ரஷ்யாவின் “உறுதியான மற்றும் அசைக்க முடியாத” ஆதரவைப் பாராட்டியுள்ளார்.

வளைகுடா நாடுகளுடனான கடல்வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான்
கடல் வழியாக ரஷ்யாவுடன் நேரடியாக இணைதல், ரஷ்யா – ஈரான் இடையிலான புதிய வர்த்தக வழித்தடங்கள், தடைகளைத் தாண்டிய வலைப்பின்னல், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிக்க இரு நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ள மாற்றுப் பணப்பரிமாற்ற முறைகள் போன்ற முறைகளை பின்பற்றுகின்றது.

ரஷ்யா ஈரானுக்கு ஒரு தற்காலிகத் தீர்வை வழங்க முடியுமே தவிர, நீண்ட கால அடிப்படையில் அது ஈரானின் பொருளாதாரப் பசியைத் தீர்க்காது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

2018-ல் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்னர் இரு நாடுகளும் நெருங்கத் தொடங்கின. 2022 உக்ரைன் போருக்குப் பின்னர் , மேற்கத்திய நிதி அமைப்புகளிலிருந்து இவ்விரு நாடுகளும் துண்டிக்கப்பட்டதால் இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஈரான் தனது மலிவு விலை ‘ஷாஹெட்’ (Shahed) ட்ரோன்களை ரஷ்யாவிற்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகச் சொன்னால், ரஷ்யா ஈரானுக்கு ஒரு அவசரகால உதவியாளராக இருக்க முடியுமே தவிர, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் ஏற்படும் பாரிய பொருளாதாரப் பள்ளத்தை நிரப்புவது ரஷ்யாவிற்கு ஒரு சவாலான காரியமே ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0