உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி காணி விவகாரம்; கஜேந்திரகுமாரின் தூண்டுதலாலேயே அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“காணி உரிமையாளர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே தையிட்டி காணி அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன” என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.

யாழ். வலிகாமம் வடக்கு, தையிட்டியில் நேற்று காணி அளவீட்டுப் பணிகள் மீண்டும் கைவிடப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“மக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரு கடிதத்தை வழங்க முன்வந்தனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட திணைக்களத்தின் கடிதத் தலைப்பில்தான் அது வேண்டும் என உரிமையாளர்கள் பிடிவாதம் பிடித்தனர்.

ஒரு திணைக்களத்தின் கடிதத் தலைப்பில் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கையெழுத்திட முடியாது என்ற அடிப்படை விடயத்தைக் கூடப் புரிந்துகொள்ளாமல் உரிமையாளர்கள் செயற்பட்டமை காணி விடுவிப்பு நடவடிக்கையைப் பாதித்துள்ளது.” – என்றார்.

காணி உரிமையாளர்கள் மீது அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய தவிசாளர் சுகிர்தன், “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரம்பத்திலிருந்தே இந்த அளவீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். அந்த அரசியல் கட்சியினரின் தூண்டுதலாலேயே இவ்வாறான முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.” – என்றார்.

“காணிகளை விடுவிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இருந்தும், அதனைப் பயன்படுத்தத் தவறியது கவலையளிக்கின்றது. இந்தப் பிரச்சினையை நீண்டகாலம் இழுத்தடித்தால் எதிர்காலத்தில் காணிகளை விடுவிக்க முடியாத சூழல் ஏற்படலாம்.” – என்றும் அவர் எச்சரித்தார்.

“அங்கு வந்திருந்த காணி உரிமையாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் அளவீட்டுக்கு ஆர்வமாக இருந்த போதிலும், ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு ஏனையோருடன் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.” – என்றும் தவிசாளர் சுகிர்தன் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

64 0 0