உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

பிரித்தானியாவின் மேர்சிசைட் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட் , ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதற்காகத் தனது பதவியைப் பறிமாற்றம் செய்யப்போவதாக வெளிவரும் தகவல்களை முற்றாக நிராகரித்துள்ளார்.

மான்செஸ்டர் நகர மேயர் ஆண்டி பர்ன்ஹாம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி, பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு சவால் விடுக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அதற்காகத் தான் பதவி விலகப் போவதாக வெளிவரும் செய்திகளை பூட்லே (Bootle) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட் மறுத்துள்ளார்.

தொழிற்கட்சியின் (Labour) தலைமைத்துவத்திற்குப் போட்டியிடக்கூடும் எனக் கருதப்படும் ஆண்டி பர்ன்ஹாம், தற்போது மான்செஸ்டர் மேயராக உள்ளார்.

அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டுமானால், யாராவது ஒரு மூத்த உறுப்பினர் பதவி விலகி அவருக்குத் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும். இதற்காகப் பாதுகாப்பான தொகுதியான பூட்லே மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் டவுட்டின் பெயர் அடிபட்டது.

இந்நிலையில் ஏற்கனவே, செயின்ட் ஹெலன்ஸ் சவுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மேரி ரிம்மர் (Marie Rimmer), பர்ன்ஹாமிற்காகப் பதவி விலகும்படி வற்புறுத்தப்படுவதாக வெளியான செய்திகளும் “வெறும் கற்பனை” என பர்ன்ஹாம் தரப்பால் மறுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0