உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
81 பார்வைகள்

பிரித்தானிய இராணுவத்தின் சர்ச்சைக்குரிய ‘அஜாக்ஸ்’ (Ajax) கவச வாகனங்களின் சோதனைகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக இராணுவ வீரர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்களின் சோதனைகளை “எச்சரிக்கையுடன்” மீண்டும் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பயிற்சியின் போது, சுமார் 30 இராணுவ வீரர்கள் இந்த வாகனங்களில் ஏற்பட்ட அதிகப்படியான சத்தம் மற்றும் அதிர்வு காரணமாக உடல்நலக் குறைபாட்டிற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, அஜாக்ஸ் வாகனங்களின் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொழில்நுட்பக் கோளாறுகள், பயிற்சியில் நிலவிய மாறுபாடுகள், கடும் குளிர் மற்றும் காற்றின் தரம் போன்ற பல காரணிகளின் கூட்டு விளைவாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தற்போது குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். இதேவேளை, இந்த வாகனங்களை உற்பத்தி செய்யும் ‘ஜெனரல் டைனமிக்ஸ்’ (General Dynamics) நிறுவனம், அரசின் இந்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0