உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம் பெறும் டிரம்ப்பின் புகைப்படம்..!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
72 பார்வைகள்

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4, 2026 அன்று கொண்டாடப்படவுள்ளது. “Freedom 250” என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்காக விழா ஒருங்கிணைப்பு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகள் போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை அமெரிக்கா அடைந்துள்ள முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகள் போன்றவற்றை முன்னிலைப் படுத்துவதே இந்த விழாவின் நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கையெழுத்துடன் கூடிய சிறப்பு பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரையறுக்கப்பட்ட பதிப்பு முறையில் வெளியிடப்படும் இது, வாஷிங்டன் பாஸ்போர்ட் ஏஜென்சியில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய 100 டாலர் நோட்டுகளில் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0