உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொ*லை ; குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

ஆஸ்திரேலியாவில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கொ*லை செய்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி விசாரணையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள அல்புரியில் (Albury), பிரித்தானியச் சுற்றுலாப் பயணியான ராய்ஸ் மல்லெட் (Royce Mallett) என்பவரைக் கொலை செய்த டேவிட் சம்மர்ஸ்-ஸ்மித் (29), மனநலக் குறைபாடு காரணமாகக் குற்றவாளியாகக் கருதப்பட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் கவுண்டி டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயது ராய்ஸ் மல்லெட், கடந்த 2024 ஆம் ஆண்டு அல்புரியில் உள்ள விடுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் தனது காரில் ஏறிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த டேவிட் சம்மர்ஸ்-ஸ்மித், எவ்வித உரையாடலுமின்றித் திடீரென ராய்ஸின் மார்பில் கத்தியால் குத்தியா நிலையில் ராய்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று 28 ஆம் திகதி நடைபெற்ற போது, நீதிபதி
டேவிட் சம்மர்ஸ்-ஸ்மித் இக்கொலையைச் செய்தது உறுதி செய்யப்பட்டாலும், அவர் நீண்டகாலமாக. ஸ்கிசோபெர்னியா (Schizophrenia) மற்றும் மனநோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்
எனவே, சட்டப்படி அவர் இக்கொலைக்கு பொறுப்பாளியாகக் கருதப்பட முடியாது என தெரிவித்து அவரை மனநலக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளி சம்மர்ஸ்-ஸ்மித் மெத்தாம்பேட்டமைன் (Ice) மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதும், தாக்குதல் நடத்திய பின்னர் அவரே பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது மனநிலை குறித்து மனநல மறுஆய்வு தீர்ப்பாயம் அவ்வப்போது ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0