உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இந்தியா – நியூசிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்லே (Todd McClay) முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டொலர் முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஆடை, துணி, தோல் பொருட்கள் மற்றும் பொறியியல் சாதனங்களுக்கு நியூசிலாந்து சந்தையில் நூறு சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 5,000 இந்திய பணியாளர்கள் நியூசிலாந்தில் தங்கிப் பணியாற்ற தற்காலிக விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பண்ணைப் பொருட்கள் மற்றும் சில விவசாயப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாமல் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0