உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து;சாலைகள் மூடல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு லான்ஷியரின் உட்டிங்ஸ்டன் பகுதியில் உள்ள போத்வெல் வீதியில் (Bothwell Road) அமைந்துள்ள கார் கேரேஜ் ஒன்றில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் தீவிரத்தினால் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததுடன், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6:00 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை (SFRS) தெரிவித்துள்ளது. தீயின் வெப்பம் காரணமாக கட்டிடத்தின் கூரை முழுமையாக இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பற்றிய கேரேஜிற்கு அருகிலேயே பிபி (BP) எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் டெஸ்கோ (Tesco) பேரங்காடி அமைந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவியது.

தீயைக் கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உயரமான இடங்களுக்குச் செல்லும் விசேட தளம் (High-reach platform) பயன்படுத்தப்பட்டன. இன்று காலையும் , எஞ்சியுள்ள சிறிய நெருப்புப் பொறிகளை அணைக்கும் (Dampening down) பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்தினால் போத்வெல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. அருகில் உள்ள டெஸ்கோ பேரங்காடி இன்று காலை வரை மூடப்பட்டிருந்தது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0