உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் கைது.!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்று தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சீராகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பலமுறை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் மனு அளித்தனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கியிருந்த பெரும்பாலான இலங்கை தமிழர்கள் மீண்டும் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டபம் சிறுவர் பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலின் அருகே தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இலங்கை தமிழர்களை கியூ பிரிவு பொலிஸார் நேற்று மாலை(27) பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48 வயது), அவரது மனைவி ராஜினி (47 வயது) இவர்களது மகள் திபேந்தினி (20 வயது) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இலங்கை தமிழர்களை படகில் இலங்கை அனுப்புவதற்கு உதவியாக டீசல் மற்றும் பேக்குடன் நின்று கொண்டிருந்த மண்டபம் எருமை தரவை பகுதியை சேர்ந்த இலங்கையர்கள் மூவர் என மொத்தம் ஆறு பேரையும் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மண்டபம் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0