உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ட்ரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய கோல் தோமஸ் ஆலனின் பின்புலம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆலன் கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தில் பொறியிலாளர் பட்டம் பெற்றவர். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தனியார் நிறுவனத்தில் பொறியிலாளராகவும், பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். நாசாவிலும் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு கமலா ஹாரீசுக்கு நன்கொடை அளித்துள்ளார். மேலும், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார். இதேவேளை இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரி காஷ் படேல் கூறுகையில்,“இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். மேலும் அவர் கைத்துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்திருந்தார். குண்டு துளைக்காத கவச உடையும் அணிந்திருந்தார்” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0