உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

“பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட நிறுவனங்களுக்கே முன்னுரிமையா?” – பிரதமர் மீது எஸ்தர் கேய் அதிருப்தி!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட பதின்ம வயது சிறுமி பிரியானா கேயின் (Brianna Ghey) தாயார் எஸ்தர் கேய், சமூக வலைதளப் பாதுகாப்பு குறித்து பிரதமர் கீர் ஸ்டார்மர் எடுத்து வரும் அணுகுமுறை தொடர்பாகத் தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.

இணையப் பாதுகாப்பு (Online Safety) குறித்துப் பேசுவதற்கு, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்கு முன்னதாகவே பிரதமர் கீர் ஸ்டார்மர் சமூக வலைதள நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.

கூகுள் (Google), டிக்டாக் (TikTok) மற்றும் மெட்டா (Meta) ஆகிய நிறுவனங்களின் தலைவர்களைச் சமீபத்தில் சந்தித்த பிரதமர் ஸ்டார்மர், “பிரித்தானியக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக எங்களுடன் இணைந்து சிறப்பாகச் செயல்படுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஏனைய 12 குடும்பங்களுடன் இணைந்து பிரதமருக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் எஸ்தர் கேய் தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு வாரிங்டன் பூங்காவில் 16 வயது சிறுமி பிரியானா கேய், இரண்டு பதின்ம வயது சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளில் ஒருவன் இணையத்தில் கொலை மற்றும் சித்திரவதை தொடர்பான ‘இருண்ட காணொளிகளை’ (Dark materials) அதிகளவு பார்த்ததாக விசாரணைகளில் தெரியவந்தது.

இதன்பின்னர் , சிறுவர்களுக்கான சமூக வலைதள மற்றும் கைத்தொலைபேசி கட்டுப்பாடுகளை வலியுறுத்தி எஸ்தர் கேய் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் இலாபத்தை விடக் குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0