• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழில் இடம்பெற்ற பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா.!

Mathavi by Mathavi
April 27, 2026
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள், யாழ் செய்திகள்
0
யாழில் இடம்பெற்ற பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா.!
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல்- 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசைக்கச்சேரி இடம்பெற்றது.

ஆண்டுதோறும் மாணவர்களிடையே தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் சூழல் பொது அறிவுப் பரீட்சை நடாத்தி பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதி சான்றிதழோடு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

சூழல் பொது அறிவுப் பரீட்சையில் முதலிடத்தை பிடித்து சூழலியல் ஆசான் க.சி குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளாக முதலாம் இடத்தைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்‌ஷிகா மதிவதனன் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த டிலுக்‌ஷினி டன்ஸ்ரன் வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றம்யா றமேஸ் மட்டக்களப்பு சென்.ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த அன்ரனி கிங்சிலி யனுசன் மன்னார் டி லா சால் கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்துராசா அன்ரனி டிலைக்சன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட மாணாக்கர் உழவர் வீட்டுத் தோட்டப் போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களும், தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டின் சிறந்த சூழல் நேயச் செயற்பாட்டாளர் விருதான தாலகாவலர் க.கனகராசா ஞாபகார்த்த விருதினை பல்லுயிர் நிறுவனரான சிவகுமாரன் நிரோசன் பெற்றுக் கொண்டார்.

சிறுதானிய பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு, தேனீ வளர்ப்பு குறுங்காடுகள் உருவாக்கம் உட்படப் பல்வேறு சூழல்நேயப் பணிகளை ஆற்றிவரும் இவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ.முகமது சுல்பீக்கர் அபூபக்கர், இயற்கைவழிச் செயற்பாட்டாளர் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைப் பொதுச்செயலாளர் கை. சரவணனும், நன்றியுரையைப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ம. கஜேந்திரனும் ஆற்றியிருந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார். அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக விழா நடந்தேறியது.

Related Posts

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. கலந்தாய்வு.!

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. கலந்தாய்வு.!

by Mathavi
May 26, 2026
0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று நேரில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமை...

பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!

பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 26, 2026
0

அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரெனத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!

மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதுடன், பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!

மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!

by Mathavi
May 26, 2026
0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் முறையற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இவ்விபத்துச் சம்பவம் குருநாகல்,...

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும்...

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 26, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி