உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு ; பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வட அயர்லாந்தின் டன்முரி (Dunmurry) பகுதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகருக்கு அருகிலுள்ள டன்முரி பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நேற்றுமுன்தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்படப் பல குடியிருப்பாளர்கள் உயிர் தப்பியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பெல்பாஸ்டின் ட்வின்ப்ரூக் (Twinbrook) பகுதியில் உணவு விநியோகம் செய்யும் ஒருவரின் கார் கடத்தப்பட்டு (Hijack), அதன் பின்பகுதியில் எரிவாயு சிலிண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டது.

பின்னர், அந்த வாகனத்தைச் சாரதி மிரட்டப்பட்டு டன்முரி பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கார் கைவிடப்பட்டதைக் கவனித்த அதிகாரிகள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது உடனடியாகச் செயல்பட்டு அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றினர்.

குடியிருப்பாளர்கள் மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகளை அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போதே அந்த வாகனம் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது.

இதேவேளை, கடந்த மாதம் லர்கன் (Lurgan) பகுதியில் நடந்த வெடிப்புச் சம்பவத்துடன் இதற்குத் தொடர்பு இருப்பதால், இதன் பின்னணியில் ‘நியூ ஐ.ஆர்.ஏ’ (New IRA) என்ற தீவிரவாத அமைப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இந்த விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் அதிகாரிகளின் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையினால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0