உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக பிரித்தானியாவில் போராட்டம் ஆரம்பம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
57 பார்வைகள்

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆறுகளை மாசுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நாட்டின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் மற்றும் நீர் நிறுவனம் ஒன்றிற்கு எதிராக லண்டன் மேல்நீதிமன்றத்தில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை ஆரம்பமாகிறது.

வை (Wye), லக் (Lugg) மற்றும் அஸ்க் (Usk) ஆறுகள் கோழிப்பண்ணை கழிவுகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றத்தால் மாசடைந்துள்ளதைக் கண்டித்து, 4,500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து இந்த நஷ்டஈடு வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

குறிப்பாக, இப்பகுதியில் வளர்க்கப்படும் 24 மில்லியன் கோழிகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஏற்படும் ‘பாசிப் படலங்கள்’ (Algal blooming), ஆற்று நீரை பச்சை நிறமாகவும் நாற்றமடித்ததாகவும் மாற்றியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமது நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துள்ள போதிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குக் காரணமானவர்களே அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதில் இயற்கை ஆர்வலர்கள் உறுதியாக உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0