உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு.!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று மாலை விருந்துபசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென ஐந்து முதல் எட்டு வரையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் பாதுகாப்பு தேடி மேசைகளுக்கு அடியில் பதுங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த உடனேயே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை இரகசிய சேவை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்நிலையில் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், பாதுகாப்புப் பிரிவினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், முதற்பெண்மணி, துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி நலமாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

என்னைக் கொல்ல இது முதல்முறை நடந்த முயற்சியல்ல, 2 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது என்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்வு, அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பகுதியில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0