உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் (USS George H.W. Bush )குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும், அதிநவீன போர் விமானங்களும் குறித்த கப்பலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.ஹோர்மூஸ் நீரிணையில் அண்மமைக்காலமாக நீடித்து வரும் குழப்பமான நிலையைத் தொடர்ந்து, ஈரான் கடல் எல்லைக்கு அருகில் இக்கப்பல் நுழைந்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது இப்பகுதியில் ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்’ (USS Gerald R Ford) மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) ஆகிய கப்பல்களுடன் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே பிராந்தியத்தில் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிறுத்தப்படுவது “மிகவும் அசாதாரணமானது” என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0