உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
51 பார்வைகள்

British Airways நிறுவனத்தின் உரிமையாளர் International Airlines Group, மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் விமான டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக Strait of Hormuz மூடப்பட்டதன் காரணமாக எண்ணெய் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன.

Iran தொடர்பான மோதல் தீவிரமடைந்ததால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களுக்கு தேவையான ஜெட் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் பயணிகளுக்கு அதிக கட்டணமாக மாறும் என IAG தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள் பொதுவாக “hedging” என்ற முறையில் முன்கூட்டியே எரிபொருளை நிரந்தர விலையில் வாங்கி விலை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க முயற்சிக்கின்றன. இருப்பினும், தற்போதைய நிலைமைக்கு அவர்கள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை என IAG கூறியுள்ளது.

தற்போது எரிபொருள் விநியோகத்தில் உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்துத் துறை (Department for Transport )அரசு, எரிபொருள் கையிருப்புகளை நெருக்கமாக கண்காணித்து வருகிறது.

மேலும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படுமானால், விமான நிறுவனங்களுக்கு தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயன்படுத்தாவிட்டால் இழந்துவிடுவீர்கள் (“use it or lose it”) என்ற விதிமுறையில் இருந்து தற்காலிக சலுகை அளிக்கப்படுகிறது.

வழக்கமாக, விமான நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட take-off மற்றும் landing slots-இல் குறைந்தது 80% பயன்படுத்த வேண்டும்.

இந்த தளர்வு, விமான சேவைகளை சீராக நிர்வகிக்கவும், எதிர்பாராத ரத்து முடிவுகளுக்கு நிறுவனங்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0