உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலைக்கு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேனிடோபா க்ருந்தல் (Grunthal) பகுதியில் உள்ள ‘கிரீன் வேலி’ (Green Valley) பாடசாலைக்கு ஆயுதங்களுடன் ஒரு சிறுவன் வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் உடனடியாக எச்சரிக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே, பாடசாலை வளாகத்திற்குள் அச்சிறுவனைக் கண்டறிந்த ஊழியர்கள், அவனிடம் இருந்த ஆயுதங்களை எவ்வித வன்முறையுமின்றி ஒப்படைக்கச் செய்தனர்.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் இந்த பாடசாலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக உடனடியாக முடக்கல் (Lockdown) நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொலிஸார் நடத்திய சோதனையில், அந்தச் சிறுவனிடமிருந்து தோட்டாக்கள் இல்லாத கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மேகசின் , மேலதிக தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பே எமது முதன்மை முன்னுரிமை என ஹனோவர் பாடசாலைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்தச் சிறுவன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0