உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுமதியின்றி கற்குவாரியா? – கிளர்ந்தெழுந்த மக்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
103 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில், எவ்வித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ள கற்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இந்தக் கற்குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தி, நேற்றுமுன்தினம் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

நிலைமையைக் கேட்டறிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் சு.சசிகுமார் மற்றும் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம் செய்தனர்.

மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்த அதிகாரிகள், குறித்த கற்குவாரியானது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியதுடன், அது உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இது தொடர்பாகத் தெளிவுபடுத்திய பிரதேச செயலாளர், “இந்த இடமானது குளத்துக்குச் சொந்தமான அரச காணி என்பதால், அங்கு எவ்விதமான கட்டுமானங்களையும் முன்னெடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த கற்குவாரிக்கு எவ்விதமான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இறுதியில், இந்தக் கற்குவாரியால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதனை அவ்விடத்திலிருந்து அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலை தணிவுக்கு வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0