உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனைத் துறையின் மொத்த விற்பனை அளவு எதிர்பார்த்ததை விட அதிகரித்தது என்று இன்று 24 ஆம் திகதி வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிக்காட்டின.

ஈரான் போர் தொடங்கிய உடனேயே எரிபொருள் விலை உயர்வு குறித்து கவலை கொண்ட பிரிட்டிஷ் வாகன சாரதிகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நோக்கி விரைந்து அதிகளவில் கொள்வனவில் ஈடுபட்டதன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று மோதல் தொடங்கிய முதல் சில நாட்களில், வழக்கத்தை விட விற்பனை மிகவும் வலுவாக இருந்ததோடு, எரிபொருள் விற்பனை பெப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 6.1% அதிகரித்துள்ளது என்று அரசாங்கத்தின் தரவுகளை பயன்படுத்திய இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தைத் தவிர்த்து, 2016 ஜனவரிக்குப் பின்னர் எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர அதிகரிப்பு இதுவாகும்.

அதேநேரம் 2026 பெப்ரவரியில் 0.6% சரிவுக்குப் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் அனைத்துத் துறைகளின் சில்லறை விற்பனை அளவுகளும் 0.7% உயர்ந்தாக தேசிய புள்ளியல் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0