உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இங்கிலாந்தில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளில் குறைந்தது பத்தில் ஒன்று, 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.இறுதி நேர இரத்துகளில் கிட்டத்தட்ட பத்தில் நான்கு அறுவை சிகிச்சைகள் தவிர்க்கக்கூடியவையாக இருந்தன என்று தேசிய சுகாதார சேவை நடத்திய ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பை வலுப்படுத்துவது தேசிய சுகாதார சேவைக்கு ஒரு முன்னுரிமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் காத்திருப்போர் பட்டியல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் அனஸ்தீசியாவில் (British Journal of Anaesthesia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 2024 நவம்பர் 11 முதல் நவம்பர் 18, வரையிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில், 78 தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளில் 22,573 அறுவை சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீட்டு சந்திப்புகளும் 19,905 திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் அடங்கும்.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய தரவுகளைத் தெரிவிக்காதவை உட்பட, பங்கேற்ற 91 அறக்கட்டளைகளில் 2,190 அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்யப்படுவதற்கான தேசிய விகிதம் 10% ஆக இருந்தது என்று பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.

இரத்து செய்யப்பட்டதற்கான முதல் மூன்று காரணங்கள் கடுமையான மருத்துவ நிலைமைகள், பட்டியல் நீட்டிப்பு மற்றும் நோயாளிகள் சமூகமளிக்காமை ஆகியவை ஆகும்.

எனினும் ஆய்வின்படி, இரத்து செய்யப்பட்டவற்றில் சுமார் 37.3% தவிர்க்கக்கூடியவையாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0