உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழக தேர்தலில் வரலாற்றுச் சாதனை.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மாற்றம்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
68 பார்வைகள்

தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.இந்த நிலையில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 84 (84.29 வீதம்) சதவீதத்தைக் கடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டு இன்னும் வாக்குப்பதிவு தொடர்வதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டு வரலாற்றில், 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக பதிவுசெய்யப்பட்ட 78.2 வீத வாக்குப்பதிவுகளை முறியடித்து இந்த தேர்தலில் 84வீதத்தை கடந்த வாக்குகள் தற்போது வரை பதிவாகியுள்ளன.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.இந்நிலையில், தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 84வீதத்தை கடந்த வாக்குப்பதிவு செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாதவகையில் 80 வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், குறித்த நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குள் சென்றவர்கள் வாக்களித்து முடிப்பதற்கு இரவு 8 மணி வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், வாக்குப்பதிவு வீதம் இன்னும் அதிகரிக்கலாம் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0